நண்பர்கள் தினம்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் அன்பிற்க்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்படுகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு எதுவும் இல்லை இன்று நட்பினை பெருமைப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய “நாகரிக யுகத்தில் மூழ்காத சிப் பிரண்ட்சிப் தான் “ என்று பெருமை அடைகிறது.
ஒவ்வொருவரும் மற்றவரிடம் பல பரிமாணங்களில் அன்பு செலுத்துகின்றோம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள், உறவுகள், காதலர்கள் என்று எல்லோரிடமும் காட்டும் அன்பு இயற்க்கையாக மனிதனிடம் அமைந்துள்ளது. ஆனால் நட்புக்கு பரிமாணமும் இல்லை,அளவும் இல்லை. அது நண்பர்களிடம், தோழிகளிடம் மட்டுமே காட்டப்படக் கூடியது உறவுகளிடம் நண்பனைப்போல் பழகினேன் என்றுதான் கூறுவார்களே தவிர நண்பனாக பழகினேன் என்று யாரும் கூறமாட்டார்கள். இதயம் ஏற்றுக் கொண்ட நண்பர்களுக்கே,தோழிகளுக்கே உரித்தாக காட்டப்படும் எதிர்பார்ப்பற்ற விஷேச அன்புதான் நட்பு
நட்பை அல்லது நண்பர்களை, தோழிகளை போற்றும் விதத்தில்தான் அதற்கென்று ஒரு நாளை அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டு, அது நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

“முதலாம் உலக யுத்தத்தின் மோசமான பாதிப்புகளே” இந்த தினத்தை ஏற்படுத்தக்க காரணமாக அமைந்தன என்று நம்பப்படுகிறது.
மனிதர்களுக்கு இடையேயுள்ள மனக்கசப்புகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையே இருக்கும் கசப்புணர்ச்சிகள் மாறி நட்பு உணர்வை மேம்படுத்துவதற்காக “அமெரிக்க” பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிதான் நண்பர்கள் தினம். இதற்கான முடிவு “1935” ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டது.
நண்பர்களைஇ தோழிகளை கவுரவப்படுத்தவும்இ மேலும் பலருடன் நட்புணர்வு கொள்ளவும் ஒரு நாளை அதற்கென்று அர்ப்பணிக்க வேண்டும் என்று அதில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படிஇ ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினம் அல்லது நட்பு தினமாகக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தனர். தேசிய அளவில் கொண்டாடப்பட்ட இந்த தினம்இ இன்று சர்வதேச அளவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் நண்பர்களின்,தோழிகளின் வீடுகளுக்குச் சென்று பரிசுப் பொருட்கள் கொடுப்பது, நண்பனின் நீண்டநாள் விருப்பத்தை அந்த நாளில் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று நிறைவேற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துவது, அதுவரை போகாத சுற்றுலா பகுதிகளுக்கு நண்பர்கள் சகிதம் செல்வது வாழ்த்து அட்டைகள் பூக்கள் வழங்குவது விழாக்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட பல அம்சங்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று இணையமும் வாழ்த்துக்களை பரிமாற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது

துன்பம் வரும் வேளையில் கடவுளை நினைக்கிறோமோ... இல்லையோ... உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிறது. பரஸ்பரம் அன்பை மட்டும் அல்லாமல் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆற்றல் நட்புக்கு மட்டுமே உரிய சிறப்பாகிறது.

இதுநாள் வரையிலும், நண்பர்களே எனக்கு இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது. நட்புக்கு இலக்கணம் வகுத்த குசேலன்-கண்ணன், துரியோதனர்- கர்ணன் உள்ளிட்ட பலர் பிறந்த நம் மண்ணில் இந்த நட்பு தினத்தில் முத்துக்களின் சிதறலாய் நமது புன்னகை நம்மையும், இந்த உலகையும் நிறைக்கட்டும்.
Previous Post Next Post
Breaking News
Loading...