இவர் திரு. இராமசாமித் தேவர், திருமதி. அங்கம்மாளுக்கு மகனாக 13.07.1953ஆம் ஆண்டு பிறந்தார். மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டி என்னும் கிராமத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். 12வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார். வடுகப்பட்டியில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியம் பயின்று கல்லூரியிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 'தங்கப்பதக்கம்' பரிசு பெற்றார். மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையை நோக்கிய பரிணாமம் இவர் பயணம்.
1980-ல் நிழல்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜா இவரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.
1981-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் விருது வழங்கப் பெற்றார்.
1985-ம் ஆண்டு முதல் மரியாதை படத்தில இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு அகில இந்திய சிறந்த பாடலாசிரியர் என்று அளவில் ஜனாதிபதியின் தேசிய விருதைப் பெற்றுத் தந்தன. பின்னர் ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்க்கு பருவக்காற்று ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்கும் இவருக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
மேலும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட கலை இலக்கிய அமைப்புகளும். மன்றங்களும். பத்திரிகைகளும் ஆண்டுதோறும் சிறந்த பாடலாசிரியராக இவரைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கியுள்ளன. நட்பு திரைப்படத்தின் மூலம் கதை- வசனகர்த்தாவாக அறிமுகமானார். நட்பு ஓடங்கள் வண்ணக்கனவுகள். அன்றுபெய்த மழையில் ஆகிய படங்கள் இவர் வசனம் எழுதியவைகளில் சிறப்பு பெற்ற படங்களாகும். 1986-ஆம் ஆண்டில் சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தால் கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு கவியரசு என்னும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார். இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வருகின்றார்.
கலைமாமணி - விருது 1990
கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது - 2003
பத்மஸ்ரீ - 2003
சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதுகள்.
1986 - முதல் மரியாதை
பாடல்:பூங்காற்று திரும்புமா
இயக்குனர் : பாரதிராஜா
1993 - ரோஜா
பாடல்:சின்னச்சின்ன ஆசை
இயக்குனர் : மணிரத்னம்
1995 - கருத்தம்மா
பாடல்:போறாளே பொன்னுத்தாயி...
இயக்குனர் : பாரதிராஜா
2000 - சங்கமம்
பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்
இயக்குனர் : சுரேஷ் கிருஷ்ணா
2003 - கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல்:விடை கொடு எங்கள் நாடே..
இயக்குனர் : மணிரத்னம்
2011- தென்மேற்க்கு பருவக் காற்று
பாடல்: கள்ளிக்காட்டு தாயே..
வைரமுத்துவின் சாதனை பயணம் தொடர வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.... வாழ்த்துக்கள்