மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டு தோறும் மாநிலங்களுக்கு தேசிய சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு உ.பி.மாநில சுற்றுலாத்துறைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
மாநில அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தாஜ்மஹால் பற்றிய இணையத் தளத்துக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடிய வகையில் தாஜ்மஹால் பற்றிய சுவையானஇ புதுமையான தகவல்கள்இ அங்கீகாரம் பெற்ற வழிகாட்டிகள்இ புகைப்படங்கள்இ தங்குமிடம் பற்றிய தகவல்கள் போன்றவை இந்த இணை யத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.