நாளுக்கு நாள் எம்மை நம்ப மறுக்கும் பல்வேறு விசித்திரங்கள் உலகில் எங்கோ ஓர் மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வரிசையில் சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்றனர். பண்ணை உரிமையாளரோஅதிசயிக்கின்றார். குட்டியின் வாய்,மூக்கு,கண்கள்இவால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட்டியின் விளையாட்டுக்கள்இ குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை வளர்த்து வருகின்றார் என்றும் முதல் தடவையாக இவ்வதிசயம் நேர்ந்து உள்ளது என்றும் பண்ணை உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.