சிறுவர் தினம்


இன்று சிறுவர் தினம் ஆகும். சிறுவர் தினமானது உலகளாவிய ரீதியில்  1989 - 01ம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக ஜக்கிய நாடுகள் சபையால் பிரகடணப்படுத்தப்பட்டது. இன்றைய உலகு நவீன உலகாக காணப்பட்டாலும் அதனைவிட சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்து செல்லுகின்றது.
இதனால் சிறுவர் துஸ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரிக்க இது காலாக அமைகின்றது. சிறுவர்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள் இன்று பல்வேறு வழிகளிலும் துஸ்பிரயோகத்திற்க்கு உட்படுத்திவருகின்றனர்.  இதனால் சிறுவர்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.
சிறுவர்களுக்கு உரிய உணர்வுகள், எதிர்பார்ப்புகள், சிந்தனைகள், சந்தோசங்கள் போன்றன மழுங்கடிக்கப்படுவதனால் இவர்கள் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாத தன்மை, விரக்தியுடையும் தன்மை என்பன அவர்களது எதிர்கால வாழ்க்கை கேள்விக்கு உள்ளாக்கப்படும். அது மட்டுமல்லாது சிறுவர்கள் தீய வழியில் செல்ல அவர்கள் மீதான துஸ்பிரயோகம் வழிவகுக்கின்றது.
சிறுவர் துஷ்பிரயோகத்தின் வகைகளில் சில
Ø  உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.
Ø  உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.
Ø  பாலியல்ரீதியான துஷ்பிரயோகம்.
Ø  உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.
Ø  புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.
 இவ்வாறான துஸ்பிரயோகங்கள்  சரியான வழிகாட்டல் இன்மையாலும் போதிய பாதுகாப்பு இன்மையாலும் சிறுவர்கள் தங்களது உரிமைகளை இழந்து துன்பப்படுகின்றனர். சிறுவர்கள் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் தங்களை தனித்து வழி நடாத்தி செல்ல முடியாதவர்களாக காணப்படுகின்றனர். சிறுவர்களை  துஸ்பிரயோகத்திற்கு  உட்படுத்துவோர் தாமும் அவ்வாறான நிலையில் இருந்து வந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே ஒவ்வொருவரும் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று உணர்ந்து நடக்கும் பட்சத்தில் மாத்திரம் தான் சிறுவர்களை காப்பாற்ற முடியும்.
Previous Post Next Post
Breaking News
Loading...