சாமித்தம்பி தில்லைநாதன்



சாமித்தம்பி தில்லைநாதன் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர். துறைநீலாவணையைப் பிறப்பிடமாகவும் மண்டூரை வசிப்பிடமாகவும் கொண்டவர்சைவப்புலவர். எஸ். தில்லைநாதன் எனப் பரவலாக அறியப்பட்டவர். பொதுவாக தமிழ் இலக்கிய, இலக்கணம், இந்து சமயம் முதலான துறைசர்ந்ததாக இவரது ஆக்கங்கள் அமைந்துள்ளன. இவரது மூத்த சகோதரர் சாமித்தம்பி முத்துக்குமாரன் (ஓய்வு பெற்ற பதிவாளர் நாயகம்) என்பவரும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமித்தம்பி தில்லைநாதன் அவர்கள் துறைநீலாவணையில் காணிமுகாமை சாமித்தம்பிக்கும், தோ.வே.மாரிமுத்துக்கும் 1948,ஆடி,24 இல் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பிக்கல்வியினை துறைநீலாவணை மகா வித்தியாலயம், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலும் கற்றார்.
 பின்னர் தனது கலைமாணிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், கல்வியியற் பட்டப்பின் டிப்புளோமாவினை இலங்கைத் திறந்த பலக்லைக் கழகத்திலும் பெற்றார். மேலும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார்.
இவர் ஆசிரியராக மட்டக்களப்பின் பல பாடசாலைகளிலும், அதிபராக மட்டக்களப்பு மண்டூர் மகாவித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா பாடசலைகளில் முதலாந்தர அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பின் மண்முனை வடக்கு பிரதேசக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச கல்விப்பணிப்பாளராகவும், போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். 1995 - 2008 இல் ஓய்வுபெறும் காலம் வரை இப்பதவியில் செயற்பட்டுள்ளார்.
1973 ஆம் ஆண்டு அகில இலங்கை சைவப்புலவர் பரீட்சையில் தேறி சைவப்புலவர் பட்டத்தினைப் பெற்றார். தற்போது அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் உப தலைவராகவும் உள்ளார்.
இவர் வெளியிட்ட புத்தகங்கள் சில
Ø  சைவமும் நாமும் (1991) இந்துசமய ஆய்வு நூல், கல்வி அமைச்சினால் துணைப்பாட நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
Ø  தமிழ் மொழி இலக்கியமும் இலக்கணமும் (1994) மொழி இலக்கிய ஆய்வு நூல். கல்வி அமைச்சினால் துணைப்பாட நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
Ø  மண்டூர் முருகன் திருவிருத்தமாலை (2001) செய்யுள் நூல்> மண்டூர்க் கலை இலக்கிய அவையினால் வெளியிடப்பட்டது.
Ø  தமிழ் மொழியில் இலக்கியச் சிறப்பு (2005) மொழி இலக்கிய ஆய்வு நூல்.
Ø  தமிழ் மொழியில் இலக்கணச் சிறப்பு (2005) மொழி இலக்கிய ஆய்வு நூல்.
Ø  மட்டக்களப்பில் இந்து சமய கலாசாரம் (2006) ஆய்வு நூல்.
Ø  சைவசித்தாந்த எட்டு விரதங்கள் (2007) ஆய்வு நூல்.
Ø  மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும் (2008) ஆய்வு நூல்.
இவர் சஞ்சிகைகளிலும்> பத்திரிகைகளிலும் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் பல வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை வானொலியில் தொகுத்தும் உள்ளார்.
பத்திரிகைகளில் வெளிவந்தவை
Ø  வரவுகூறும் காக்கைக்கு விருந்து -தினகரன் (25-01-1981)
Ø  வெண்பாவில் வஞ்ச உரை -தினகரன் (03-05-1981, 10-05-1981)
Ø  காவேரி நாட்டுக் கண்ணகி அம்மனாய் அமர்ந்த துறைநீலாவணை வீரகேசரி (15-07-1984)
Ø  கூத்தப்பெருமானின் ஆடல் உணர்த்தும் உண்மைகள் வீரகேசரி (15-05-1988)
Ø  அருட்கொடைவழங்கும் மண்டூர்க்கந்தன் வீரகேசரி (24-03-1991)
Ø  தமிழ் மக்களின் மனதை நீங்காதவர் பண்டிதர் வி.சீ.கந்தையா வீரகேசரி (01-06-1991)
Ø  தலச்சிறப்பு வாய்ந்த மண்டூர் வீரகேசரி (05-08-1991)
Ø  சுரம் பிசகாது ஊரி இசைத்தபாடலே யாழ்நூல் பிறப்பின் அடிப்படை பராசக்தியை பிம்மத்திலும் கும்பத்திலும் வைத்து ஒன்பது நாள் வழிபடும் பெருவிழா வீரகேசரி (06-10-1991)
Ø  விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் வீரகேசரி (03-11-1991)
Ø  ஞாயிறு போற்றுதும் ஞாலம் காப்பதால் வீரகேசரி (12-01-1992)
Ø  அல்லல் தீர்க்கும் மருந்து மண்டூர் முருகனின் திருவருள் வீரகேசரி (30-08-1992)
Ø  எங்கும் நிறை பொருளாய் தோன்றும் சக்தி வீரகேசரி (27-09-1992)
Ø  மண்டூரில் கண்களிகூர காட்சி கொடுக்கும் திருமுருகன் வீரகேசரி (18-11-1992)
Ø  மண்டூர்க் கவிஞர் சோமசுந்தரம் வீரகேசரி (11-02-1994)
Ø  ஆயிரம் மலர்கள் மலர்ந்து குவிந்து காலம் காட்டும் கண்ணியம் வீரகேசரி (01-05-1994)
Ø  மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் பற்றிய வரலாற்றுத்தவறுகள் தினக்குரல் 09-02-2003
Ø  எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் உள்ளங்களைத் தொட்ட புலவர்மணி தினக்குரல் 04-01-2004.
Ø  மட்டக்களப்பில் சக்தி வழிபாடு - பிருத்தானிய சைப்பேரவையின் 12 ஆவது மாநாடு -2009.
சஞ்சிகைகளில் வெளிவந்தவை
Ø  உள்ளத்தால் பொய்யாதொழுகின்……. கலைச்செல்வி” 1974
Ø  முத்தமிழின் சுவையும் வழக்குத்தமிழின் ஏற்றமும் - தமிழ்மொழித்தின சிறப்புமலர் கொழும்பு வடக்கு 1994.
Ø  பாராட்டுமடல் - கந்தையா தியாகராஜா பொன்விழா மலர் 1996
Ø  மட்டக்களப்புத் தமிழகத்தின் பாரம்பரியக் கலை: கொம்பு விளையாட்டு பிரதேச கலாசாரப் பேரவை மண்முனை தென்மேற்கு 1997
Ø  தகனக்கிரியை நினைவு மலர் திருமதி புவனேஸ்வரி சிவப்பிரகாசம் 1997
Ø  எம்மண்ணின் மைந்தன் - புகழ்பூத்த புலவர்மணி . பெரியதம்பிப்பிள்ளை மருதம்போரதீவுப்பற்று கலாசார பேரவை சிறப்புமலர் 1998
Ø  வயிரவர் வழிபாடு –“தேரோட்டம்கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் 1998
Ø  அமைதி சுடர்க - மருதம்போரதீவுப்பற்று கலாசார பேரவை சிறப்புமலர் 2003
Ø  தமிழ்மொழியில் இசைக்கலை –“புலமைபட்டிருப்பு கல்வி வலய சிறப்புமலர் 2007
வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பானவை
Ø  நடராஜ தத்துவம் - 24-09-1991
Ø  ஆன்ம ஈடேற்ற வழிகள் - 01-10-1991
Ø  நவராத்திரி - 08-10-1991
Ø  முப்பொருள் கொள்கை விளக்கம் - 22-10-1991
Ø  சிவசின்னங்கள் - 29-10-1991
Ø  முப்பொருள் கொள்கை விளக்கம் (ஆன்மா) - 05-11-1991
Ø  முப்பொருள் கொள்கை விளக்கம் (பாசம்) - 26-11-1991
Ø  மட்டக்களப்புப் பிரதேசத்தில் நாட்டுக்கூத்துக்கள் - 24-01-1992
Ø  சிற்பக்கலை கார்த்திகை 1991, தை 1992
Ø  வள்ளுவரின் பொருளாதாரக் கொள்கை 19-06-1992
Ø  வள்ளுவரின் வாய்மை வாதம் 05-09-1992
Ø  தமிழரின் கோயில்களும் கலைகளும் 19-09-1992
இவற்றை விடவும் பல விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ளார்...............
Previous Post Next Post
Breaking News
Loading...