யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு "164 மில்லியன்" அமெரிக்க டொலர் செலவில் குடி நீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் திணேஷ் குணவர்தனவின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஏற்ப இத்திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மறறும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்கள் பயன்பெற உள்ளனர்.
விவசாய அபிவிருத்தி தொடர்பான சர்வதேச நிதியம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்று ஏ.எப்.டி. நிதியம் ஆகியவற்றின் நிதயூதவியின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்துக்கென மதிப்பிடப்பட்டுள்ள 164 மில்லியன் டொலரில் 138 மில்லியன் வெளிநாட்டு நிதியூதவியாக கிடைப்பதுடன் திட்டத்தை 2017இல் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது