சினிமாத் தரத்தினை நோக்கி நகரும் எம்மவர் படைப்புக்களின் ஓர் அடையாளமாக வெளிவந்திருக்கிறது நீதந்தகாயங்கள் .
P.M மீடியாவின் தயாரிப்பில், பிரியந்தனின் இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் புதுவருட வரவாக இப்பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
மறந்திடுவாயோ, மறந்திடுவாயோ அழகிய காதலை, மறந்திடுவாயோ, மறந்திடுவாயோ பழகிய நாட்களை.. என பாமினியின் வரிகளுக்கு ஹரிச்சரண் மற்றும் ஹரிணியின் குரல்கள் அழகாக வடிவம் கொடுக்க ரவிச்சந்திரனின் இசை அற்புதமாக உயிர் கொடுத்திருக்கிறது.
ஆழகான நகரும் காதல் அதன்பின்னர் நாயகனுக்கு ஏற்பட்ட மனத்தடுமாற்றம் அதனால் நாயகிக்கு ஏற்படும் விரக்தியும் அதற்கு விலையாக அவள் தேடிக்கொள்ளும் தற்கொலை முடிவு என சாதாரண வாழ்வியலில் நடைபெறக்கூடிய சம்பவங்களை அழகாக ஒளியிலும் ஒலியிலும் பதிவுசெய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு படத்தொகுப்பு அற்புதம். யாழ்ப்பாணத்தின் அழகினை பிரியந்தனின் கேமரா நன்றாகவே கைதுசெய்திருக்கிறது.
ஜெராட் மிதுனாவின் நடிப்பு அற்புதம் ஒவ்வொரு காட்சியிலும அழகானகாதல் ஜோடியாகவே மாறியிருக்கிறார்கள்.
“சிதறிய இதயத்தை பொருத்திக்கொடு !
நான் செத்துவிட்டேன் மீண்டுமொரு உயிரைக்கொடு ! “
என்ற பாமினியின் வரிகளுக்கு ஒரு சபாஷ்!
நான் செத்துவிட்டேன் மீண்டுமொரு உயிரைக்கொடு ! “
என்ற பாமினியின் வரிகளுக்கு ஒரு சபாஷ்!
ஆண் உண்மையாக இருந்தால் பெண் ஏமாற்றி விடுகிறாள் பெண் உண்மையாக இருந்தால் ஆண் ஏமாற்றி விடுகிறான். இருவரும் உண்மையாக இருந்தால் விதி இருவரையும் ஏமாற்றி விடுகிறது. இதில் இப்படைப்பு இரண்டாவது ரகம். மொத்தத்தில் காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் காட்சிவழி விழிப்பூட்டியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ஒருசில தவறுகளை தவிர்த்துவிட்டுப்பார்த்தால் நீ தந்த காயங்கள் சுகமாகத்தான் வலிக்கிறது.
Thx - Voice of Chavakachcheri -Director - Piriyanthan