கடற்கோட்டை


இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் கடலின் மத்தியில் அமைந்து அழகாக காட்சியளிக்கும் ஊர்காவற்றுறை ஹீமென்கில் கோட்டை வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. இக் கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் கட்டப்பட்டது. இக் கோட்டையினை முதன் முதலில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் உருவாக்கப்பட்டது.






இக் கோட்டையானது பன்றியின் கால் வடிவத்தில் அமைந்துள்ளது. ஒல்லாந்தரால் சிறப்பாக பேணிப்பாதுகாக்கப்பட்ட கோட்டை 1795ல் பிரிட்டிஸ்காரர் கைப்பற்றிய பின்பு சிறைக்கூடமாகவும், மருத்துவ நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டது.

கடலில் கப்பல் மூலம் போவோர் வருவோருக்கு நுழைவுச்சீட்டு இக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டது. நாட்டிற்கு கப்பல் மூலம் வரும் பகையை இக்கோட்டை காத்து நின்றது. இங்கு வைத்து கப்பல்கள் ஆராய்ந்து சோதனை செய்யப்பட்டது. இதே வேளை இந்தியாவில் இருந்து குடியேறுபவர்களை பொது சுகாதாரத்திற்கு என்று தனிமைப்படுத்தும் நிலையமாகவும் இக் கோட்டை விளங்கியது.  சில காலம் இது தொல்லியல் திணைக்களப்பொறுப்பில் இருந்தது. இங்கு பிரிட்டிஸ் காலத்தில் சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட இக்கோட்டையில் ஆயுள் தண்டைனை கைதிகளே சிறைப்படுத்தப்படுத்தப்படுத்தப்பட்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் ஊர்காவற்றுறை முக்கிய கடற்படைத்தளமாக விளங்காத போதும் பிரதான சுங்கப் பரிசோதனை நிலையமாக விளங்கியது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை அழகுடன் கடலின் மத்தியில் கம்பீரமான தோற்றத்தோடு உல்லாச பயணிகளை பார்த்தவுடன் கவரும் ஒரு இடமாக காட்சி அழிக்கின்றது. வரலாற்று பொக்கிசமாக இது விளங்கி நிற்கிறது என்றால் மிகையாகாது.

நீண்ட நாள் ஆசை இக் கடற்கோட்டைக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று அவ் ஆசையும் நிறைவேறியது.
By:-Kandee
Previous Post Next Post
Breaking News
Loading...