பொருட்களின் விலையேற்றத்தின் விளைவாக இன்று எல்லோருக்கும் தொழில் செய்தே ஆக வேண்டாய கட்டாய நிலை காணப்படுகின்றது. இதனால் இன்று ஒய்வின்றி உழைப்பதையே பிரதான நோக்காக கொண்டு பலரும் ஒடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவற்றின் பின்னனியில் வீட்டில் ஓய்வாக இருக்கவோ, பிள்ளைகளை, தாய், தந்தையரை கவனிக்கவோ நேரமின்றி பலரும் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஊருக்கு ஊர் ஒவ்வொரு பல முதியோர் இல்லங்களும் உதயமாகிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு தென்மராட்சிப் பகுதியில் உதயமாகி பல அநாதரவற்ற முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள முதியோர் இல்லம் கைதடி முதியோர் இல்லம் ஆகும். இங்கு 108 ஆண்களும், 82 பெண்களும் உள்ளடங்கலாக 190 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அளப்பரிய சேவையை ஆற்றிவருகின்றது.
1952ம் ஆண்டு இவ் முதியோர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் 1958ம் ஆண்டு உத்தியோக பூர்வமாக இயங்க தொடங்கியது. தற்போது இயங்கிவரும் இவ் நிலையம் பல முதியவர்களின் ஏக்கங்களோடு இயங்கிவருகின்றது.
இங்கு இருக்கும் முதியவர்களுக்கு முக்கிய தேவையாக அரவணைப்பை பிரதானமாக எதிர்பார்க்கின்றனர். தாங்கள் வெளி மக்களுடன் கதைத்து பழகுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்குமாறு இவர்களது அவாவவாக உள்ளது.
இங்கு இருக்கும் முதியவர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் தமக்கு தெரிந்த வேலைகளை முதியோர் இல்ல வளாகத்திலேயே செய்கின்றனர். குறிப்பாக மொறட்டுவையில் இருந்து வந்து இணைந்து கொண்ட சிறில் ஸ்ரீபன் பனான்டோ இங்கு பராமரிக்கப்படுகின்றார். தான் ஓர் தச்சு தொழிலாளி எனவும். இவ் இல்லத்தின் பழுதடைந்த மரதள பாடங்களை சீர் செய்யும் பணியை மேற்கொள்கின்றேன் எனவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில் தனது தச்சு வேலைக்கு தேவையான ஆயதங்கள் இல்லையென்று கூறி கவலையடைந்தார்.
இல்லத்தில் 30மன நோயாளிகள் முதியோருடன் சேர்ந்து பராமரிக்கப்படுவதால் அங்கு இருக்கும் முதியோர்களுக்கு இடையூறாக அமைகின்றது என்றும் இவ்வாறு அவர்களை பராமரிக்க மன நோயாளர் பராமரிப்பு நிலையம் ஒன்று இவ் வளாகத்தினுள் நிறுவப்பட உள்ளதாகவும் பணியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்
இவ் இல்ல மேற்பார்வையாளர்களால்களால் மாதத்தில் இரு முறை முதியவர்களை சுற்றுலா கூட்டி செல்வதாகவும் அது தமக்கு சந்தோசமாக இருப்பதாகவும் அங்குள்ள முதியவர்கள் கூறினார்கள். இவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்த பெற்ற ஆலயங்களுக்கு அழைத்து செல்வதாகவும் எதிர்வரும் காலத்தில் வெளி இடங்களுக்கு அழைத்து செல்ல ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் நிறுவன ஊழியர் ஆருரன் குறிப்பிட்டார்.
இவ் நிறுவனத்தின் அத்தியேட்சகர் வு.கிருபாகரன் கூறும் போது வட மாகாணத்தில் 90,070 பேர் முதியவர்களாக உள்ளனர். அவர்களை பராமரிக்க ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பகல் பராமரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இவ்வாறான செயற்பாடுகளுகளை செயற்படுத்த மக்களும் தமக்கு துணைவர வேண்டும் என்று கூறினார்.
By :- Kandee