
ஒரு எழுத்தாளனின் நிலை சித்தரிக்கப்பட்டுள்ளது.
"நூறாயிரம் போர் வீரர்களின் பேனட்டுகளைக் விட(துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருக்கும் கூர்மையான கத்தி) செய்தி தாள்களை கண்டு நான் பயப்பிடுகிறேன்....." நெப்போலியன் கூறிய கருத்தின் படி
இன்றைய நடைமுறைக் காலகட்டத்தில் ஊடக சுதந்திரம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
இன்று நெப்போலியன் கருத்து சற்று மாற்றமடைந்து ஊடகவியலாளர்கள் சித்திரவதைகள், மனித உரிமை மீறல்களுக்கு பயந்து தமது பணிகளை செய்ய வேண்டிய நிலைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஊடக சுதந்திர தினம் ஆனது 1991 மே மாதம் 3ஆம் திகதி நமீபியாவில் ஆபிரிக்க அச்சு ஊடக மாநாட்டில் ‘விண்டோக்’ பிரகடனம் நிறைவேற்றப் பட்டது. அப்பிரகடனத்தின் மூலம் ஜனநாயக மற்றும் அடிப்படை மனித உரிமை சுதந்திர ஊடகமொன்றின் தேவை உணரப்பட்டதுடன், சர்வதேச மட்டத்தில் சுதந்திர, சுயாதீன மற்றும் பல்தர ஊடகமொன்றை நடத்திச் செல்வதற்கு தேவையான அக்கறை உணரப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பின் 26ஆவது உச்சி மாநாட்டில் விண்டோக் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதுடன், அப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப் பட்டதையடுத்து சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்தின் 19ஆவது சரத்தின் மூலம் அனைத்து மக்கள் பிரிவினருக்கும் பேச்சு சுதந்திர உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தோற்றம் பெற்ற ஊடக சுதந்திர தினம் இன்று பெயரளவில் மட்டும் காணப்படுகிறது.
மே - 3ம் திகதி தான் இவ் தினம் என்றும், ஊடக சுதந்திரம் என்றால் என்ன என்று அறியாத பலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
சர்வதேசரீதியாக என்னதான் மனித உரிமை,மனிதாபிமானம் என்னும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் பேனாக்கள்,கமெராக்கள்,ஒலிவாங்கிகளின் கழுத்துகள் நெரிக்கப்பட்டு,திருகப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தகவல்களை வெளியிடும் அறியும் உரிமைகள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இன்று இலங்கையில் எத்தனை ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், பாதுகாப்பற்ற சூழலி வாழ முடியாது நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எத்தனை பேர்?
ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளான டென்மார்க், பின்லாந்து, அயர்லாந்து, நோர்வே, ஸ்வீடன். போன்ற நாடுகள் மற்றைய நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
ஊடக சுதந்திர தினத்தினை புதிய ஊடக கலாசாரத்தை ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில் ஊடகத் துறையுடன் தொடர்புபட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
இணையத்திலிருந்தும், நண்பர்கள் இடம் இருந்து தகவல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.