மனிதர்களை அஞ்ச வைக்கும் ‘அஞ்சாலை’ மீனினம்..!

கடலுக்கு அடியில் செல்லும் மனிதர்களை அஞ்ச வைத்துவிரட்டும் ‘அஞ்சாலை’ மீனினம்இ விசித்திர தன்மைகளைக் கொண்டது. மன்னார் வளைகுடா பகுதியில் வாழும் உயிரினங்களுள் ஒன்று ‘அஞ்சாலை’ மீன் பவளப்பாறையின் இடுக்குகள் பொந்துகளில் மறைந்திருந்து வாழும் இவற்றை ஆராய்ச்சியாளர்களை தவிர மற்றவர்கள் பார்த்திருப்பது கடினம்தான். கடல் குச்சிகளை உண்டு வாழும் இவற்றின் குணம் விசித்திரமானதாகும். மீன் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும்இ மீன்களுக்குரிய செல்கள் இவற்றுக்கு இல்லை.

பாம்பின் தோற்றம் கொண்ட இவை 150 செ. மீ. நீளத்துடனும்இ கண் சிறியதாக இருக்கும் என்பதால் பார்வையும் குறைவாகவே இருக்கும். இரவில் மட்டுமே வெளியே வரும் இவைஇ வேட்டையாடி உண்ணும் வழக்கம் கொண்டவை. இந்திய பெருங்கடலில் 57 வகையும்இ மன்னார் வளைகுடாவில் ஆறு வகை அஞ்சாலையும் காணப்படுகின்றன.



மனிதனின் விரல்களைப் பார்த்தால் சதையை மட்டும் உறிஞ்சி உண்டுவிடும். இதனால் கடலுக்கடியில் வருபவர்கள் இவற்றை கண்டவுடன் தலைமறைவாகிவிடுவர். இவற்றை உணவாக யாரும் உட்கொள்வதில்லை. அலங்கார மீனுக்காக மட்டும் சிலரால் பிடிக்கப்படுகிறது.
Previous Post Next Post
Breaking News
Loading...