தாவரங்களுக்கும் நுண்ணறிவு உண்டு என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் கிளி பாக்ஸ்டர் என்பவர் தற்செயலாக தாவரங்களின் மர்மங்களை அறிந்துகொள்ள நேரிட்டது. ஒருசமயம் அவர் காவல் துறையினருக்கும்இ பாதுகாப்புப் பணிபுரிபவர்களுக்கும் பொய்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் குறித்து வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு விந்தை நிகழ்வை அவர் கண்டார். பொய்யைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் ஹபாலி கிராப் என்னும் கருவி இணைக்கப்பட்ட தாவரத்தைப் பற்றி பாக்ஸ்டர் எண்ணியபோதெல்லாம் அந்தக் கருவியில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. அவருடைய எண்ணங்களை தாவரம் பெற்றுக் கொண்டு தனது உணர்ச்சிகளைக் கருவிக்கு அனுப்பியிருக்கிறது.