பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 1918 - மார்ச் 10, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948இல் வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.