குறவர்களின் வாழ்க்கை




இலங்கையில் வாழ்ந்து வருகின்ற ஆதிவாசிகளின் வழிதோன்றல்களாகக் குறவர் குலத்தைக் கருதமுடிகின்றது. ஆனாலும் அவர்களது நடை, உடை, செயற்பாடுகள் முற்று முழுதாக ஆதிவாசிகளின் செயற்பாடுகளில் இருந்து வேறுபட்டே காணப் படுகின்றன. ஆனால் இவர்கள் இடம் விட்டு இடம் நகர்ந்த கொண்டே இருப்பர். ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை.
இந்தியாவில் பரவாலாக வாழ்ந்து வரும் இந்தக் குலத்தவர்கள் தெலுங்கு மொழியையே தமது மொழியாகப் பேசி வருவதோடு பனை ஓலைகளால் வேயப்பட்ட சிறிய குடிசைகளிலே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தொடர்ச்சியாக 7நாட்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்கி வாழ்வதில்லை. அங்கிருந்து இன்னோர் இடத்திற்க்குச் சென்று முகாமிட்டு வாழ்கின்றனர். இந்திய வம்சாவழியினரின் நடத்தைக்கு ஒப்பான நடத்தையையும் தோற்றத்தையும் இவர்கள் கொண்டிருந்தாலும் இவர்களது பிரதான தொழில் சோதிடம்(சாஸ்திரம்) கூறுவது, சுப நேரக்கணிப்பு Nஐhதிடம் கூறுவது, குரங்கு, பாம்புகளை ஆட்டுவித்துப் தமது வாழ்க்கையை நடாத்துவதாகும்.

இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்குக் குடி பெயர்ந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். இந்தியாவின் மதுரை, பாண்டிய நாடு ஆகிய இடங்களில் இவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் பண்டைய கிரந்தமான 'சத்தர்ம லங்காரய' மற்றும் 'பன்சிய பனஸ் ஐhதக' எனப்படும் 550வம்சக் கதை போன்றவற்றில் இவர்கள் நாடோடிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதேபோல் இலங்கையில் பிரபல்யம் பெற்ற கிராமிய நடனமான 'சொகரி' நாடகத்திலும் நாகம் ஒன்றைப் பிடிக்க இந்தக் குலத்தவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த காலப்பகுதி பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை.

இவர்கள் இரண்டு பிரிவினராவர். முதல் வகுப்பினர் பாம்பர்டிகள் என்று அழைக்கப்படுவர். இரண்டாவது குழுவினர் குரங்காட்டிகள் என்று அழைக்கப்படுவர். இவர்கள் குரங்குகளைப் பழக்கி ஆட்டுவித்து வாழ்க்கை நடாத்துபவர்கள்.

'550' என்ற வம்சக் கதைகளில் வருகின்றபடி மானிட வர்க்கத்தில் நடமாடிய நாகராஐ அரசனை இவர்கள் பிடித்து வசப்படுத்தியே நாகங்களை ஆட்வித்துப் பணம் உழைத்து வருவதாகவும் குறிப்பிடப்படகின்றது. இந்தக் குலத்தவர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே சிங்கள சமூகத்துவர்களுடன் ஒன்றினைந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் ஆங்கிலேயர் மலைநாட்டைக் கைப்பற்றியவுடன் அப்பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் ஆங்கிலேயர் மலைநாட்டைக் கைப்பற்றியவுடன் அப்பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வந்த குறவர்கள் தமது இருப்பிடத்தை இழக்கலாயினர். ஆப்போது கண்டி இராஐதானியைக் கைப்பற்றியவுடன் அப்பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வந்த குறவர்கள் தமது இருப்பிடத்தை இழக்கலாயினர். அப்போது கண்டி இராஐதானியைக் கைப்பற்ற நடைபெற்ற போர்களில் இவர்களது குலத்தவர்கள் பெருமளவானோர் உயிரிழந்தனர். அதனால் அக்காலப் பகுதியில் இவர்கள் மலைநாட்டில் இருந்து சிங்களக் கிராமங்களுக்கு இடம் பெயரலாயினர்.

அவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள் ஆற்றங்கரையோரங்களிலும் நதிக்கரைகளிலும் முகாமிட்டு வாழ்வதை வழக்கமாகக் கொண்டனர். இந்துக்களின் தீபாவளித் திருநாளை இவர்களும் தமது கலாசாரப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் சிறப்புத் திருநாளாகக் கொண்டாடுவது வழக்கமாகும். அன்றைய  தினம் இவர்கள் விNஷட மதவழிபாடுகளிலும் ஈடுபடுவதுண்டு. இவர்கள் தமது ஐPவனோபாயத்தின் உயிர் நாடியான நாகத்திற்க்கும் குரங்கிற்கும் விசேட விழா நிகழ்த்துவதும் உண்டு.
இவர்கள் அன்றாடம் உழைத்து அன்றாடத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பாம்புகளை ஆட்டுவித்தல், குரங்கு விளையாட்டுக் காட்டுதல், Nஐhதிடம் கூறுவது, சுபமங்கள நேரம் பார்த்தல், பச்சை குத்துவது என்பன இவர்களது பிரதான தொழில்களாகும். இத்தொழிர்களை இவர்கள் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளும் இதே தொழிலுக்கே பழக்கப்படுத்தப்படுகின்றனரேயொழியக் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இலங்கையில் இச் சமூகத்தினரைத் தாழ்த்தப்பட்ட சாதியினராகவே பெரும்பாலானோர் நோக்குகின்றனர்.

இச் சமூகத்தினர் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட ஒழுங்கிற்க்குக் கௌரவமளித்தாலும் இவர்களுக்கே என்று அவர்களால் கடைப்பிடிக்கப்படுகின்ற சட்டம், ஒழுங்கு விதிகளும் உள்ளன. அவர்கள் மத்தியில் ஒரு தலைவர் இருப்பதுண்டு. அவரைக் குழுத்தலைவர் அல்லது 'ஆராச்சி'(கிராம சேவகர், பண்ணையார் போன்ற பதவி) என்று கருதலாம். பெரியவர் என்ற அர்த்தத்திலான பதவியே இதுவாகும்.

இவர்களது சமூக நீதிமன்றத்தில் அந்தந்தக் குற்றங்களுக்கு ஏற்பத் தண்டனைகள் வழங்கப்படுவதுண்டு. குற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர் அதனைச் சத்தியம் செய்வதன் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும்.
பெருங்குற்றமாயின் எண்ணெய்ச் சத்தியம் அல்லது விளக்குச் சத்தியம் என்ற சத்தியத்தின் மூலம் உறுதியாகக் கூறி இனிமேல் அத்தகைய குற்றத்தைப் புரிவதில்லை என்பதைக் கூறவேண்டும்.

விசாரணையின் மறு நாள், ஈரத்துணியோடு எண்ணெய்க் கிண்ணத்தை மூன்று முறை வலம் வந்து சிரம் பணிந்து சத்தியம் செய்வதாகும். ஆத்தோடு அந்த எண்ணெய்க் கிண்ணம் கொதிக்கும் நிலையில் இருக்கும் மூன்று முறை சிரம் தாழ்த்தி விட்டு அந்த எண்ணெய்க்குள் குற்றமிழைத்தவர் அவரின் விரலை இடவேண்டும்.

அவர் உண்மையில் குற்றம் புரியவில்லையாயின் அவரின் விரலில் சூடு படாது என்கின்றனர். அதுபோன்று மற்றொரு தண்டனை முறைதான் சூடான இரும்பைப் பிடிக்கச் செய்வது. அதேபோன்று இருவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் அவர்களை அடையாளம் காண்பதற்காக இரண்டு பானைகளில் சோறு சமைக்க உத்தரவிடப்படுவர். முதலில் சோறு சமைத்த பானையை உடையவர் நிரபராதி என்ற முடிவுக்கு வருவர். இத்தண்டனைகள் தமது சமூகத்தைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கக் கடைபிடிக்கக் கையாளப்படும் முறைகளாகும்.

இவர்கள் இயற்கையான வணக்க வழிபாடுகளைக் கடைபிடித்து வந்தாலும் தம்மைப் பௌத்தர் என்று ஒரு குழுவினரும், இந்துக்கள் என்று வேறு ஒரு குழுவினரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இவர்கள் பௌத்த, இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதோடு வெள்ளிக் கிழமையைச் சிறப்பு நாளாகக் கருதுகின்றனர். விஷ;னு, முருகன், அம்மன் ஆகிய தெய்வங்களை முறையே வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் வணங்கி வருவதுண்டு.

இவர்கள் தோஷம் குறித்து மிகவும் அவதானமாக இருப்பார்கள். அவ்வாறு ஏதும் ஏற்பட்டால் இவர்கள் சோதிட பலம் மற்றும் ஆற்றல்கள் இல்லாமல் போய்விடலாம் என்று நம்புகின்றார்கள்.
அதனால் இவர்கள் தங்கும் குடிசைகளைச் சுற்றிப் பாதுகாப்புக் கல் பதிப்பதுண்டு. அதன் மூலம் தமது ஆற்றல்கள் பாதுகாக்கப்படுவதாக நம்புகின்றனர்.

அவர்களின் கூட்டத்தைச் சோந்த ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் சுற்றத்தார்கள் அழுது புலம்புவதில்லை. இறந்தவர் வாழ்ந்த குடிசைக்குள்ளேயே புதை குழியைத் தோண்டிச் சடலத்தைத் துணியால் சுற்றித் தலை குப்புற வைத்துப் புதைப்பர். ஆந்தக் கூடாரத்தை எரித்து விடுவது வழக்கமாகும். பின்னர் அப்பகுதியை விட்டு விட்டு அனைவரும் வேறிடத்திற்க்கு வெறியேறி விடுவர். இவ்வாறு வௌ;வேறு விதமான சிறப்பம்சங்கள் இவர்களது வாழ்க்கையில் காணப்படுகின்றன.
இன்று இலங்கையில் குறவர்களினை அரசோ, வேறு முக்கிய பதவிகளில் இருப்பவர்களோ அலட்சியம் செய்துவருகின்றனர் இதனால் குறவர் குலமானது எதிர்காலத்தில் முற்று முழுதாக அழியக் கூடிய நிலையை நோக்கிச் செல்கின்றது என்றே கூறமுடியும்.
Previous Post Next Post
Breaking News
Loading...